கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை: காங்கிரஸ் பொறுப்பாளர் எச்சரிக்கை

கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்தார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்தார்.
பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் கட்சியின் புதிய இலச்சினையை அறிமுகம் செய்து வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்டுக்கோப்பான கட்சியாகும். தனிநபர்களைவிட கட்சிதான் பெரியது. எனவே, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யாராவது செயல்பட்டால், அதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியிலேயே இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயல்படுவது, பதவியைப் பெற மிரட்டுவது, ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து விலகமாட்டார்கள். பாஜகவினர் மிகவும் கெட்ட அரசியலை நடத்துகிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கப் பணத்தாசை காட்டிவருகிறார். மாநிலத்தில் பாஜகவினர் நடத்திவரும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. பாஜகவின் அரசியலை கர்நாடக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார் அவர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ் கூறுகையில்,"காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிபூசல் எதுவுமில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கட்சியில் இருந்து விலகமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுவேன். அவை அனைத்தும் வதந்திகள்தான். காங்கிரஸ் கட்சியில் எல்லாம் சரியாக உள்ளது. இதில் யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com