பெங்களூரு

கார் விபத்து: கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 4 பேர் காயம்

DIN

கார் விபத்தில் கன்னட நடிகர் தர்ஷனின் வலது கை எலும்பு முறிந்தது. மேலும், அவருடன் சென்ற நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
கன்னட திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் தர்ஷன். மூத்த நடிகர் தேவராஜ், அவரது மகனும், நடிகருமான பிரஜ்வல் ஆகியோருடன் மைசூரு வனவிலங்கு சரணாலயத்துக்கு ஞாயிற்றுக்கிமை சென்றார். அங்கு விலங்குகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.
பிறகு, மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரைச் சந்தித்துவிட்டு இரவு தனது நண்பர் அளித்த விருந்தில் பங்கேற்றுவிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் காரில் பெங்களூருக்கு புறப்பட்டார். 
மைசூரு வி.வி.புரம் வெளிவட்டச் சாலையில் பெய்த பலத்த மழையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத்தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நடிகர் தர்ஷனின் வலது கை எலும்பு முறிந்தது. நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல், நடிகர் தர்ஷனின் நண்பர் அந்தோணி ஆகியோர் காயமடைந்தனர். 
இதையடுத்து, நடிகர் தர்ஷன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடிகர் தர்ஷன் காயமடைந்ததையடுத்து, அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் ரசிகர்கள் குவிந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT