பெங்களூரு

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

DIN

பெங்களூரு மாநகராட்சிக்குச் சொந்தமான 24 மகப்பேறு மருத்துவமனைகளில் ஓராண்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சியின் வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெங்களூரு மாநகராட்சியின் 24 மகப்பேறு மருத்துவமனைகளில் 2019-ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் 2020-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிவரை பிறக்கும் எல்லா பெண் குழந்தைக்கும் தரமான கல்வி அல்லது திருமணச் செலவுக்காக மகாலட்சுமி திட்டத்தின்கீழ் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி பணப் பத்திரமாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு சட்டப்பேரவைக்கு தலா 4 வாகனங்கள் வீதம் 50 சதவீதம் மானியத்தில் நடமாடும் உணவகம் நடத்த அன்னப்பூர்ணேஸ்வரி திட்டத்துக்கு ரூ.5கோடி
ஒதுக்கப்படும். 
ஆரோக்கிய கவசம் எனும் திட்டத்தின்கீழ் ஆரம்பக்கட்டத்திலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக 2 முழுமையான தயார்நிலை வாகனங்களை வாங்க ரூ.3கோடி ஒதுக்கப்படும். 
டாக்டர் பாபுஜெகஜீவன் ராம் பொதுமருத்துவமனையில்புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கப்படும். பெண்கள் சார் நலத்திட்டங்களுக்காக ரூ.19.80கோடி ஒதுக்கப்படும். இதில் இருந்து வார்டுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்படும்.
பொதுப்பபிரிவுநலத்திட்டங்கள்: ஏழைகளின் தோழன் திட்டத்தின்கீழ் மாநகராட்சி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள தெருவோரக் கடைக்காரர்களுக்கு தள்ளுவண்டி அளிக்க ரூ.4கோடி ஒதுக்கப்படுகிறது. வார்டுக்கு 15 தள்ளுவண்டிகள் ஒதுக்கபடும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர் வீடு கட்டிக் கொள்ள நிதியுதவிவழங்க ரூ.5கோடி ஒதுக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினரை தன்னிறைவாக்க ரூ.2கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரவு தங்கல் மையங்களை கட்டி பராமரிக்க ரூ.1கோடி ஒதுக்கப்படுகிறது. 
மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டங்களுக்கு ரூ.75கோடி ஒதுக்கப்படுகிறது. காதுகேளாதோர், ஊமைகள், கண்பார்வையிழந்தோர் பள்ளிகளுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. வார்டுக்கு 10 மிதிவண்டிகளை அளிக்க ரூ.10கோடி ஒதுக்கப்படும். 
மாற்றுத்திறனாளிகள் தேசிய மற்றும் பன்னாட்டுவிளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்புத்தொகை அளிக்க ரூ.2கோடி ஒதுக்கப்படுகிறது. பள்ளிக்கட்டணம் வழங்கல், மருத்துவ உதவி, ஜெய்பூர் செயற்கைக்கால் வாங்கரூ.75கோடி ஒதுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT