லஞ்சம்: கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கைது

நில ஆவணங்களை திருத்தம் செய்ய லஞ்சம் பெற்ற கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை ஊழல் ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.

நில ஆவணங்களை திருத்தம் செய்ய லஞ்சம் பெற்ற கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை ஊழல் ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
பெங்களூரு ஆர்.பி.சி. லேஅவுட்டைச் சேர்ந்தவர் ராம்நகர் மாவட்டம், பிடதி ஒன்றியம் மஞ்சேனஹள்ளி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில், மாணவர் விடுதி தொடங்க தடையில்லா சான்று பெற அக்கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஷமீத் ஓலேகரை அணுகியுள்ளார். 
அவர் தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, புதன்கிழமை ஷமீத் ஓலேகரிடம் அந்த நபர் ரூ. 1 லட்சத்தை தந்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர், ஷமீத் ஓலேகரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷமீத் ஓலேகரிடம் ராம்நகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு படையினர் தொடர்ந்து விசாரணை செய்து
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com