பிப்.24-இல் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் பிப்.24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 

பெங்களூரில் பிப்.24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
கர்நாடக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலத் துறை மற்றும் வீ ஆர் யுவர் வாய்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள கர்நாடக மாநில ஆயுதப்படை விளையாட்டுத் திடலில் பிப்.24-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, உற்பத்தி, விருந்தோம்பல் துறைகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. முகாமில் 7 ஆயிரம் பேருக்கு மேலான வேலைதேடுவோர் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. இதில் காதுகேளாதோர், வாய்பேசாதோர், பார்வையற்றோர், புடைப்பெயர்பு குறைபாடு உடையோர் கலந்துகொள்ளலாம். 
வேலைவாய்பு முகாமில் எழுத்தறிவில்லாதவர்கள், பாதியில் பள்ளி படிப்பை இழந்தவர்கள், எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் முகாமில் உள்ளன. 
18-30 வயதுக்குள்பட்ட புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். 
வேலை தேடுவோர் தன்விவரக்குறிப்பு 6 படிகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7557550888, 7557550999,9700799993, 9551500061 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ அல்லது  w‌w‌w.‌w‌e​a‌r‌e‌y‌o‌u‌r‌v‌o‌i​c‌e.‌o‌r‌g என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com