பெங்களூரு

நடிகர் தர்ஷனின் 25-ஆவது கன்னட திரைப்படம்: மார்ச் 1-இல் வெளியீடு

DIN

நடிகர் தர்ஷனின் 25-ஆவது கன்னட திரைப்படம் மார்ச் 1-ஆம் தேதி கர்நாடகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன் நடித்து, ஹரிகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள "எஜமானா' கன்னட திரைப்படம் மார்ச் 1-ஆம் தேதி கர்நாடகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படம், நடிகர் தர்ஷன் நடித்துள்ள 25-ஆவது படமாகும். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 
இப்படத்தின் இசையமைப்பாளர் வி.ஹரிகிருஷ்ணாவுக்கும் இது 25-ஆவது படமாகும். நடிகை ரஷ்மிகா மந்தனா, நடிகர்கள் தனஞ்செயா, ரவிசங்கர், தாக்கூர் அனுப்சிங் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 
இப்படம் குறித்து இயக்குநர் ஹரிகிருஷ்ணா கூறியது: நடிகர் தர்ஷனுடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். படத்திற்கு நல்ல தேர்ந்தெடுப்பதில் நடிகர் தர்ஷன் வல்லராக இருக்கிறார். மக்களுக்கு பிடித்த இசையை சரியாக தேர்வுசெய்கிறார். அதனால்தான் அவரது படத்தின்பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகின்றன என்றார்.
இந்த படத்தின் டிரைலர் தென்னிந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட 2-ஆவதுபடமாகும்.  படத்தின் பாடல்கள் வெளியிடுவதற்கு முன்பே பிரபலமாகியுள்ளதாக நடிகர் தர்ஷன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"நல்ல கதைகொண்ட திரைப்படம். இது ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன். இத்திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதற்கு இயக்குநர் ஹரிகிருஷ்ணாவே காரணம். 
நடிகர் அம்பரீஷ் எனது உண்மையான எஜமானனாக இருந்தார். அதனால்தான் அவரது மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது மறைவின் காரணமாக கடந்தவாரம் எனது பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. கேக், பதாகைகள் கொண்ட பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க எனது ரசிகர்களை கேட்டுக் கொண்டேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT