பெங்களூரில் ஓவியக் கண்காட்சி

பெங்களூரில் தேசிய அளவிலான ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி மார்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெங்களூரில் தேசிய அளவிலான ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி மார்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் வெள்ளிக்கிழமை ஓவியக் கண்காட்சியை அதன் தலைவர் பி.எல்.சங்கர் தொடக்கிவைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருள்களைப் பார்வையிட்டார். இதுகுறித்து  செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மார்ச் 3-ஆம் தேதிவரை நடைபெறும் கண்காட்சியில் தேசிய அளவில் ஓவியக் கலைஞர்கள் உருவாக்கிய சிறந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த ஓவியங்களுக்கு பெங்களூரில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஓவியக் கண்காட்சிக்கு கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் ஏற்பாடு
செய்துள்ளோம். 
கண்காட்சியில் ஓவியங்கள் மட்டுமின்றி, கிராமக் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய கதர் ஆடைகள், அலங்காரபொருள்கள், சேலைகள், ஜவுளிகள், பருத்திசேலைகள், மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் மாலை 7 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com