தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 பெங்களூரு லால்பாக்கில் நடைபெற உள்ள தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 பெங்களூரு லால்பாக்கில் நடைபெற உள்ள தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துதோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரு, லால்பாக் பூங்காவில் உள்ள தோட்டக்கலை பயிற்சி மையத்தில் தேன் எடுத்தல், காளான் வளர்ப்பு, இயற்கை உரம் பற்றிய 6 நாள்கள் தோட்டக்கலை பயிற்சி பிப்.28 முதல் மார்ச் 5-ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ளது. கன்னடத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுப் பிரிவினர் 18 முதல் 33 வயதுக்குட்பட்டவராகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருப்பது நல்லது. திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பித்தோர், உழவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியின் அடிப்படையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். விண்ணப்பங்கள் பிப்.21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை   இணையதளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் லால்பாக் பூங்காவில் உள்ள தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரிடம் பிப்.26-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். விண்ணப்பங்களை பயிற்சி முகாமில் பங்கேற்க தகுதியான மாணவர்களின் பட்டியல் பிப்.27-ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080 26564538, 9071280906, 9845549545 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com