பெங்களூரு

"பொங்கலை தமிழர்கள் போற்ற வேண்டும்'

DIN

தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாட தவறக் கூடாது என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி கேட்டுக் கொண்டார்.
கர்நாடக திமுக சார்பில் பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பொங்கல்விழா, திருவள்ளுவர்நாள், தமிழ்ப்புத்தாண்டு, உழவர் திருநாள்விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில திமுக அமைப்பாளர் இராமசாமி தலைமை தாங்கினார். 
கட்சியின் அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் மணி, ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இராமசாமி பேசியது: தமிழர்களின் பண்பாட்டின் உச்சமாக கருதப்படும் பொங்கல்விழா நடத்தப்படுகிறது. உழவுக்கு உதவியாக இருக்கக்கூடிய சூரியன், கால்நடைகள், இயற்கையைப் போற்றிவணங்கும் அறுவடை திருநாள் எனப்படும் இந்தவிழா தமிழர் திருநாளாக போற்றப்படுகிறது.  தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் பொங்கல் விழாவை கொண்டாட தவறக் கூடாது. தமிழர்களின் அடையாளமாகத் திகழும் மொழி, கலை, இலக்கியம் மற்றும்பண்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும். தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழி நீண்டகாலமாக தமிழரிடையே இருந்துவருகிறது. 
அதன்படி,தைமுதல்நாள் தான் தமிழ்ப்புத்தாண்டாகும். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிமலர்ந்தால், தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படும். அந்த நாளுக்காக தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்றார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT