கோலார் தங்கவயலில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கோலார் தங்கவயலில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோலார் தங்கவயலில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை, ஆண்டர்சன் பேட்டை, கோரமண்டல், மாரிகுப்பம் ஆகிய பகுதிகளில்  அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை மாலை அணிவித்து தொழிற்சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் மு.அன்பு தலைமையில் பெண்களுக்கு இலவச சேலை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பிறந்த நாள் விழாவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அனிதா பிரியா, பழக்கடை கதிரவன், செல்வம், சகிலா ஜெயராமன், சாலமோன், கோவிந்தராஜ், விநாயகம், சவுந்தரராஜ், தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com