அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

பெங்களூரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய

பெங்களூரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள், சொத்துகள் குவித்துள்ளதாக ஊழல் ஒழிப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கர்நாடக மாநிலம், பெங்களூரு கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் சதீஷ், விஜயபுரா மாவட்டம் கர்நாடக ஊரக அடிப்படை கட்டுமான வளர்ச்சி கழகத்தின் துணை இயக்குநர் சரத் கங்கப்பா இஜ்ரே, கதக் மாவட்டம் விவசாயிகள் தொடர்பு மைய வேளாண் அதிகாரி பிரகாஷ் கெளடா குதரிமோட்டி, பெங்களூரு மாநகராட்சி ஜே.பி.நகர் துணைப்பிரிவு வருவாய்த்துறை அதிகாரி மஞ்சுநாத் ஆகியோருக்கும் சொந்தமான இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் பல கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப்பணம், தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனர். சதீஷ், சரத் கங்கப்பா இஜ்ரே, பிரகாஷ்கெளடா குதரிமோட்டி, மஞ்சுநாத் ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com