பெங்களூரு

கர்நாடகத்தில் முதல் நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

DIN

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் செவ்வாய்க்கிழமை 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கர்நாடகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் ஏப். 18-ஆம் தேதி 14 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வது செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. 
வேட்புமனு தாக்கல் செய்யும் முதல் நாளில் தென்கன்னட தொகுதியில் லோக் தாந்திரீக் ஜனதா தள் கட்சியை சேர்ந்த சுப்ரீத்குமார் பூஜாரி, மண்டியா தொகுதியில் எஸ்.யு.சி.ஐ கட்சியை சேர்ந்த கெளடளே சென்னப்பா, மைசூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அயூப்கான், எஸ்.யு.சி.ஐ கட்சியை சேர்ந்த சந்தியா, காங்கிரஸ் (ஐ) கட்சியைச் சேர்ந்த ஆனந்த், தென்பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அம்ரோஸ் டி மெல்லோ உள்ளிட்ட 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT