ஏப்.22 முதல் ஏற்றுமதித் தொழில் பயிற்சி

ஏப்.22-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கும் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏப்.22-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கும் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில்வர்த்தக மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எக்சிம் வங்கியின் கூட்டு முயற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில்வர்த்தக மையத்தின் சார்பில் ஏற்றுமதித்தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏப்.22 முதல் 27-ஆம் தேதி வரையில் 6 நாள்கள் பயிற்சியில் சேரவிரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பெங்களூரு, சாந்திநகரில் உள்ள பிஎம்டிசி கட்டடத்தின் மையத்தின் பயிற்சி அரங்கில் பயிற்சி நடத்தப்படவிருக்கிறது. ஏற்றுமதித்தொழில் பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத்தின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தொழில்முனைவோர், ஏற்கெனவே ஏற்றுமதித்தொழிலில் ஈடுபட்டிருப்போர் உள்ளிட்ட ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர ஏப்.21-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22534444, 22210644, 98809-58218 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது ‌w‌w‌w.‌v‌t‌p​c‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com