கர்நாடகத்தில் உள்ள வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு பாரபட்சம்: காங்கிரஸ் எம்.எல்.சி.

கர்நாடகத்தில் உள்ள வங்கிகளை இணைப்பதில், மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.சி. கே.கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.


கர்நாடகத்தில் உள்ள வங்கிகளை இணைப்பதில், மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.சி. கே.கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கித் துறையை சீரமைக்கும் நோக்கில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, வங்கிகளை தேசியமயமாக்கினார். இதன் மூலம் சாதாரண மக்களிடையே வங்கிகளை கொண்டு சேர்த்தார். தேசியமயமாக்கப்பட்ட 20 வங்கிகளில் கர்நாடகத்தில் நிறுவப்பட்டிருந்த 4 வங்கிகளும் அடக்கம். இவற்றில் விஜயா வங்கி முக்கிய வங்கியாகும். இது போன்ற வங்கி உயர்நிலையை அடைவதற்கு முல்கி சுந்தரராம் ஷெட்டி, லட்சக்கணக்கான வங்கித் துறை ஊழியர்களுடன் நூறாண்டுகளாக அரும்பாடுபட்டார். விஜயா வங்கி நாட்டின் பெருமைமிகு வங்கியாகும். இதன் மொத்த வர்த்தகம் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இந்த வங்கியின் வாராக் கடனும் மிகவும் குறைவாக உள்ளது. இது போன்ற லாபகரமான விஜயா வங்கியை தனது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நஷ்டத்தில் இயங்கும் பாங்க் ஆஃப் பரோடா மற்றும் தீனா வங்கியை காப்பாற்ற, அந்த வங்கிகளுடன் இணைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் மாநிலத்தில் உள்ள நூற்றாண்டு கண்ட வங்கியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளார். இது கர்நாடகத்தின் சுயமரியாதை மற்றும் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. விஜயா வங்கியை காப்பாற்ற கர்நாடக மக்கள் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. லாபத்தில் இயங்கும் வங்கியை நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைப்பது சமூக விழிப்புணர்வுக்கு எதிரானதாகும். மைசூரு மன்னர் நிறுவியிருந்த ஸ்டேப் பேங்க் மைசூருவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைத்துவிட்டார் பிரதமர் மோடி. இதன் மூலம் கர்நாடகத்தின் வங்கி பாரம்பரியத்தை குழிதோண்டி புதைத்து விட்டார். அதேபோல, கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொரு வங்கியான கார்ப்பரேஷன் வங்கியை வேறொரு வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது மத்திய அரசு.
இது போன்ற முடிவுகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் பேங்க் ஆப் பரோடா, தீனா வங்கியை விஜயா வங்கியுடன் இணைக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்திடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com