மண்டியா தொகுதி: சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு

மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாஜக


மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது.  இந் நிலையில், எஞ்சியுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், கோலார் தொகுதியில் எஸ்.முனிசாமியை வேட்பாளராக அறிவித்துள்ள பாஜக,  மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.
அத் தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்தாமல் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால்,  முதல்வர் குமாரசாமியின் மகனும், மஜத வேட்பாளருமான நிகிலுக்கும், சுமலதாவுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் அறிவிப்பு நிகிலின் வெற்றிவாய்ப்பை குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவின் 2-ஆவது வேட்பாளர் பட்டியலிலும் தென் பெங்களூரு தொகுதிக்கான வேட்பாளரை அக் கட்சி அறிவிக்காதது, முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினியை வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்பை குறைக்கச் செய்துள்ளது.
இன்னும் கொப்பள், தென் பெங்களூரு, ஊரக பெங்களூரு, ராய்ச்சூரு, சிக்கோடி ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவிக்க வேண்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com