சென்னை

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

தினமணி

ஏஜி டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் பாதையில் முதல் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ஒரு பாதையிலும், தேனாம்பேட்டை வரை மற்றொரு பாதையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தின் இறுதி பகுதி, ஏஜி டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையில் 9.5 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் இரட்டை சுரங்கப்பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், ஏஜி டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே முதல் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டீசல் மெட்ரோ ரயில் என்ஜின் மூலமாக இந்த சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் நடத்தி முடித்தனர்.
 இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியது:
 மின்மயமாக்கல் பணிகள், சிக்னல், சுரங்கப்பாதையில் காற்றோட்டம், நடைமேடை கதவுகள் நிறுவுதல் ஆகிய பணிகள் முடிந்துள்ளது. இங்கு அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இச்சோதனை ஓட்டங்களில் ஏதாவது தவறுகள் கண்டறியப்பட்டால் அவை சரி செய்யப்படும். இந்த பாதையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்தில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT