சென்னை

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

DIN

ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னை உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு தரும் ஒரே அடையாள சான்றையே நாடு முழுவதும் எல்லாத்துறைகளும் ஏற்க வேண்டும்; ரயில்வே நிர்வாகம் தரும் சான்றை வாங்கக்கூறி அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும்; 
மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்க வேண்டும்; சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும், தத்கல் டிக்கெட்டுகளிலும் ஒரே மாதிரியான 75 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும்; ரயில்களில் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளில் கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும்; ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், நடைமேடைகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்கள் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஜான்ஸி ராணி, மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT