சென்னை

கல்லூரி மாணவர்கள் மோதல்: 7 பேர் கைது

DIN


சென்னை திருவல்லிக்கேணியில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் இருந்து மயிலாப்பூர் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது. இதில் இருந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் கானா பாட்டுப் பாடியபடி வந்தனராம்.
திருவல்லிக்கேணி அரசு பல்நோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது அங்கிருந்த ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் மீது பேருந்தில் இருந்த சில மாணவர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசினராம். இதைப் பார்த்த புதுக் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து பேருந்தின் நடத்துநர் செல்வராஜ், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, புதுக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் செ.செய்யது நாசித் (18), ஜ.இர்பான் (19), சி.லோகேஷ் (18), அ.ஹாரூன் பாட்ஷா (19), ம.கோடீஸ்வரன் (18), பெ.டெண்டுல்கர் (19), அ.அப்துல்ஹியூம் (20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT