லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு

லாரிகள் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு

லாரிகள் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை ஐந்தாவது நாளாக தொடர்ந்த இந்த வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன.
கோயம்பேடு சந்தை: சென்னை, கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் 500 -க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 7,000 டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள், பூக்கள், பழங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். 
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியது:
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகள் வழக்கம்போல் சந்தைக்கு வருகின்றன. வடமாநிலங்களில் இருந்து உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் கொண்டு வரப்படும் லாரிகளை ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சிலர் வழிமறித்து நிறுத்தி வைப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால், லாரி ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
விலை உயர்வு: வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.40 -க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ. 50 -க்கும், ரூ. 30 -க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் ரூ. 40 -க்கும், சாம்பார் வெங்காயம் ரூ. 50-லிருந்து ரூ. 60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ. 25 -லிருந்து ரூ. 30 -க்கும், பெரிய வெங்காயம் ரூ.20-லிருந்து ரூ. 25-க்கும், தேங்காய் ஒன்று ரூ. 25-லிருந்து ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது. லாரிகள் வேலைநிறுத்தம் தொடருமேயானால் வரும் நாள்களில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார் அவர்.
காய்கறிகளின் மொத்த விலை நிலவரம் (கிலோவில்): பீட்ரூட் ரூ. 20-25, நூக்கல் ரூ. 30-35, முள்ளங்கி ரூ. 20-25, கத்திரிக்காய் ரூ.20-30, புடலங்காய் ரூ.25-30, கோவைக்காய் ரூ.20-25, சேனைக்கிழங்கு ரூ. 20-25, வெண்டைக்காய் ரூ. 20-30, காலி பிளவர் ரூ. 20-25.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com