ஹைதராபாதில் ராமாநுஜருக்கு 216 அடி உயர பஞ்சலோக சிலை

சமத்துவத்தை வலியுறுத்திய ராமாநுஜருக்கு ஹைதராபாத் விமான நிலையம் அருகேயுள்ள ஷம்ஷாபாதில் 216 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள வளாகத்தின் திட்டப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததும்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராமாநுஜ சின்ன ஜீயர் சுவாமிகள்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராமாநுஜ சின்ன ஜீயர் சுவாமிகள்.

சமத்துவத்தை வலியுறுத்திய ராமாநுஜருக்கு ஹைதராபாத் விமான நிலையம் அருகேயுள்ள ஷம்ஷாபாதில் 216 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள வளாகத்தின் திட்டப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததும், வரும் ஆண்டில் சிலை திறப்பு விழா நடைபெறும் என்று ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜீயர் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமாநுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.
ஜீயர் கல்வி அறக்கட்டளை, விகாச தரங்கனி சார்பில் "சமத்துவம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஜீயர் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமாநுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் பேகம்போது, "இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டுமெனில் சமத்துவம் நிலவ வேண்டும். எல்லா உயிரினங்களும் அதனதன் சூழலில் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகம் நலமாக இருக்கும்' என்றார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உலகில் சமத்துவத்தை பரப்புவதற்காக 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமாநுஜர்,   ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, காஞ்சிபுரத்தில் வளர்ந்து,  ஸ்ரீரங்கத்தில் ஆன்மிக தொண்டில் ஈடுபட்டவர். 
உலகுக்கு சமத்துவத்தை நிலைநாட்ட முயன்றவர். 1,000 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டிய அவருக்கு ஹைதராபாத் விமான நிலையம் அருகேயுள்ள ஷம்ஷாபாதில் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. 
அதைத்தொடர்ந்து 70 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 216 அடி உயரமுள்ள பஞ்சலோக திருமேனியை நிறுவியுள்ளோம்.
இதற்கு 108 திவ்யதேசங்கள் உதவின. ரூ.1,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டப் பணிகளில் தற்போது ரூ.600 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரும் ஆண்டில்  சிலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஜீயர்சுவாமிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com