மூதாட்டியின் தொண்டையில் அடைத்திருந்த செயற்கைப் பல் அகற்றம்

சென்னையைச் சேர்ந்த மூதாட்டியின் தொண்டையில் சிக்கிய செயற்கைப் பல் தொகுப்பை நவீன கருவி மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை, குடல் சிகிச்சைப் பிரிவு
மூதாட்டி பட்டுவுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி. 
மூதாட்டி பட்டுவுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி. 


சென்னையைச் சேர்ந்த மூதாட்டியின் தொண்டையில் சிக்கிய செயற்கைப் பல் தொகுப்பை நவீன கருவி மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை, குடல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரி பட்டு (65), செயற்கைப் பல் தொகுப்பை வைத்திருந்தார். இப்பல் தொகுப்பைக் காணவில்லை. 
சில நாள்களில் பட்டுவால் உணவு உண்ணவும், எச்சில் விழுங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை, குடல் சிகிச்சைப் பிரிவில் அண்மையில் பட்டு அனுமதிக்கப்பட்டார். 
அங்கு இரைப்பை, குடல் சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன், பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் அவரைப் பரிசோதித்தனர். அதில், அவர் செயற்கைப் பல் தொகுப்பைத் தெரியாமல் விழுங்கியதும், அது வாயில் இருந்து 15 செ.மீ. தூரத்தில் தொண்டையில் 2.5 செ.மீ. அளவுக்கு அடைத்துள்ளதும் தெரியவந்தது.
நவீன கருவி மூலம் அகற்றம்: இதையடுத்து, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நவீன கருவி துணை கொண்டு பட்டுவின் தொண்டையில் அடைத்திருந்த செயற்கைப் பல் தொகுப்பு வெளியே எடுக்கப்பட்டது. 
இந்தப் பல் தொகுப்பு சற்று கீழே சென்றிருந்தால் உணவுக் குழாயில் ஓட்டை ஏற்பட்டு மிக ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். 
இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்குப் பின் பட்டுவால் எச்சில் விழுங்குவதுடன், உணவும் உண்ண முடிகிறது என்றார் டாக்டர் ஜெயந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com