சென்னை

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

DIN

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் அளிக்கப்பட உள்ளன.
அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு பயிற்சிகள் வாரந்தோறும் இரண்டு நாள்கள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டை பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில்... மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்தப் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 100 மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
5,711 பள்ளிகள்: இந்தத் திட்டத்தில் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க 5,711 அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. சென்னையில் மட்டும் 93 அரசுப் பள்ளிகள் பதிவு செய்துள்ளன. 
பள்ளி நேரத்துக்குப் பிறகு உடற்பயிற்சி வகுப்புக்கு உரிய நேரத்தில் அல்லது அந்தந்த பள்ளியின் வசதிக்கு ஏற்ப மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். பெண் பயிற்சியாளர்கள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT