சென்னை குடிநீருக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணா நதியின் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னை பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் பூண்டி
சென்னை குடிநீருக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


கிருஷ்ணா நதியின் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னை பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வெள்ளிக்கிழமை காலை முதல் 400 கன அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
சென்னை மாநகர மக்களின் தாகம் தணிக்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி திகழ்ந்து வருகிறது. அதனால் இந்த ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகும். தற்போதைய நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின்படி கடந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பூண்டி ஏரிக்கு 595 கன அடி நீர் வீதம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறப்பு முன்பு நீர்மட்டம் 12.25 அடியாகப் பதிவாகி வெறும் 13 மில்லியன் கன அடி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து நீர் வருவதால் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 6-ஆம் தேதி முதல் சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு 300 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
எனவே, வெள்ளிக்கிழமை காலையில் நீர்மட்டம் 24.08 அடியாகவும், 720 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு காணப்பட்டது. 
இதுபோன்ற காரணங்களால் நீர் திறப்பு 400 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரியின் நீர்மட்டம் 35 அடி ஆகும். இதில் 3231 மில்லியன் கன அடி வரையில் தண்ணர் சேமித்து வைக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com