18 நவம்பர் 2018

தாய்லாந்து செல்ல எளிய முறையில் விசா

DIN | Published: 04th September 2018 04:44 AM


பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த நாடாக தாய்லாந்து தற்போது விளங்கி வருவதால், விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தாய்லாந்து சுற்றுலா ஆணைய நிர்வாகிகள் வாலாய்லக் நொய்பக், சோலட சித்திவர்ன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர்கள் நிருபர்களிடம் கூறியது: கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தாய்லாந்துக்கு சுமார் 10,000 இந்தியர்கள் சுற்றுலா வந்துள்ளனர். விசா நடைமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்த 3 நாள்களுக்குள் விசா பெறமுடியும். அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக நடப்பாண்டில் சென்னை, இந்தூர் போன்ற நகரங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரத் திட்டமிட்டுள்ளோம்.
 

More from the section

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை பள்ளிகளில் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிய மாணவர் குழுக்கள்
தேசிய இயற்கை மருத்துவ தின விழா: அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் இன்று தொடக்கம்
பரங்கிமலையில் மாற்றியமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயிலை இயக்கி சோதனை
100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை