வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டிப் பிடிப்பு

DIN | Published: 12th September 2018 04:26 AM


எண்ணூர் விரைவு சாலையில் சரக்கு பெட்டக லாரி ஓட்டுநர்களை கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்குப் பெட்டக லாரிகள் எண்ணூர் விரைவுச் சாலையில் வரிசையாக நிற்பது வழக்கம். வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தினேஷ் (40),திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவுச் சாலையின் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு நபர்கள், திடீரென தினேஷை கத்தியால்தாக்கி அவர் வைத்திருந்த செல்லிடப்பேசி, பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
அப்போது அங்கு ரோந்து வந்த போலீஸாரிடம், தினேஷ் வழிப்பறி குறித்த தகவலை தெரிவித்தார். உடனே போலீஸார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அதே நபர்கள், அங்கு நின்றுக் கொண்டிருந்த மற்றொரு சரக்கு பெட்டக லாரியின் ஓட்டுநரான தேனியைச் சேர்ந்த முருகேசனை (29) கத்தியால் குத்தி, வழிப்பறியில் ஈடுபடுவதை போலீஸார் பார்த்தனர்.
அந்த இரு நபர்களும், போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பதும், தப்பியோடியது அதேப் பகுதியைச் சேர்ந்த மதன் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய மதனும் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
 

More from the section

ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சி: நவ.29-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை - கொல்லம் இடையே சிறப்புக் கட்டண ரயில்கள்: டிச.3 முதல் இயக்கம்
கஜா புயல்: உதவிக்கு கடற்படை தயார்
1,700 பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை
கல்லூரி மாணவிகளுக்கு திறன் வளர்பயிற்சி: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து