சென்னை

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு ஆட்சியர் நோட்டீஸ்: தடை விதிக்க மறுப்பு

DIN


திமுக முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன். இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 41 ஆயிரத்து 764 சதுர அடி நிலத்தை கடந்த 1996-ஆம் ஆண்டு ரூ.27 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த நிலத்துக்குப் பட்டா பெறப்பட்டது.
இந்த நிலையில் அந்த நிலம் ஷெனாய் நகர் நகரமைப்புத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்கக் கோரி தேவராஜனுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், எழும்பூர் - நுங்கம்பாக்கம் வட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை, வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT