சென்னை

ரயில்வே உதவி மையங்கள் மூலம் 893 குழந்தைகள் மீட்பு

DIN

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையங்கள் மூலம் நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 893 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை விழாவில் தெரிவிக்கப்பட்டது.
ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான ரயில்வே பாதுகாப்புப் படை, 1957 செப்டம்பர் 20 -இல் இந்திய அரசின் ஆயுதப்படைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. அந்த நாள் ரயில்வே பாதுகாப்புப் படை நாளாக இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, தெற்கு ரயில்வே சார்பில் 33 -ஆவது ஆண்டு ரயில்வே பாதுகாப்புப் படை தொடக்க நாள் நிகழ்ச்சி, சென்னை அயனாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா தலைமை வகித்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பிரிந்தரா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வேயில் 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ரயில்வே பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. அதன் விவரம்:
தெற்கு ரயில்வேயில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 315 ரயில்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் 59,965 குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.88 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளிடம் உடைமைகள் திருட்டு உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 359 வழக்குகளில் 277 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.6,37,178 மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் நிறுவப்பட்டு, நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 893 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தது தொடர்பாக 8,082 பேருக்கு நீதிமன்றத்தில் மூலம் ரூ.22,87, 850 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்து, தூய்மைக்கு கேடு விளைவித்தது தொடர்பாக, 52, 693 பேர் பிடிக்கப்பட்டு, ரூ.1.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT