செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

அக்.10-இல் எம்ஜிஆர் நினைவு போட்டிகள்

By சென்னை,| DIN | Published: 24th September 2018 02:25 AM

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.- ஜானகி மகளிர் கல்லூரியில் அக்.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மெüன நடிப்புப் போட்டி, ரங்கோலிப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய ஆறு போட்டிகள் இடம் பெறும். போட்டிகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெறும். இந்தப் போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.- ஜானகி மகளிர் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது www.mgrjanaki.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 5 ஆகும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவோருக்கு முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு. போட்டியில் பங்கேற்பதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இது குறித்து மேலும் தகவல் பெற 044- 2493 7382 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

More from the section

ரூ.3.16 கோடியில் ஆவடியில் 5 பூங்காக்கள்
மெரீனா கடற்கரை விவகாரம்: மாநகராட்சிக்கு உத்தரவு
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஆண்டு உற்சவம்: 21-இல் தொடக்கம்
டிச. 16-ல் சென்னையில் ஐயப்ப குரு ஸ்வாமிகள் சங்கமம்
ரயில் விபத்திலிருந்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆர்.பி.எஃப். தலைமைக் காவலர்