முக்குலத்தோர் புலிப்படை பொதுச் செயலர் மீது வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலர் மீது விருகம்பாக்கம் போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலர் மீது விருகம்பாக்கம் போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ், செல்வநாயகம் ஆகியோர் மீது 8 பிரிவுகளின்கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இதைக் கண்டித்து, விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை இரவு சுவரொட்டிகளை ஒட்டினர்.
 இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரதீஷ் என்ற காவலர் அளித்த புகாரின்பேரில், முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலர் தாமோதரகிருஷ்ணன் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் விருகம்பாக்கம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com