கண்காணிப்புக் கேமரா வைப்பது பாதுகாப்புக்கான மூலதனம்: காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன்

கண்காணிப்புக் கேமரா வைப்பது செலவு அல்ல, அது பாதுகாப்புக்கான மூலதனம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கூறினார்.
யானைக்கவுனி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்து பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன். 
யானைக்கவுனி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்து பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன். 


கண்காணிப்புக் கேமரா வைப்பது செலவு அல்ல, அது பாதுகாப்புக்கான மூலதனம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கூறினார்.
சென்னை யானைக்கவுனியை 100 சதவீதம் கண்காணிக்கும் வகையில் 75 தெருக்கள், 9 சந்திப்புகளில் புதிதாக 300 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 200 இடங்களில் பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்களை உடனே தொடர்பு கொள்ளும் வகையில் மைக், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை, யானைக்கவுனி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆணையர் விசுவநாதன் திங்கள்கிழமை திறந்து வைத்து பேசியது:
தனியார் உதவியுடன் சுமார் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 300 கேமராக்கள் மூலம் யானைக்கவுனி பகுதி முழுவதும் 100 சதவீதம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் தடுக்கப்படும். யாரேனும் குற்றங்களில் ஈடுபட்டால் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். சென்னையில் கண்காணிப்புக் கேமரா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்ட பின்னர், குற்றங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல குற்றங்களின் ஈடுபடுவோர் விரைவாகக் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னையின் வடக்கு மண்டலத்தில் மட்டும் இதுவரை 30 ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. 
மேலும் பொது இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தும்படி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்புக் கேமரா அமைப்பது செலவு அல்ல, உங்களது பாதுகாப்புக்கான மூலதனம்.
இதேபோல சென்னை முழுவதும் பொது இடங்கள் 100 சதவீதம் கண்காணிப்புக் கேமரா மூலம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர் கே.பிரபாகர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com