சென்னை

பொதுத் தேர்வுகள்: முன்னேற்பாடுகள் தீவிரம்

DIN

தமிழகத்தில் வரும் மார்ச் முதல் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே மாணவர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை நடப்புக் கல்வியாண்டு முதல் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 14 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
 விரைவில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 3,400 பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 இந்த விடைத்தாள்களை தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த மையப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விடைத்தாள் திருத்துதல், ஆசிரியர் பட்டியல் தயாரிக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.
 அதே நேரத்தில் பொதுத்தேர்வுகளை திறம்பட நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள், "பொதுத்தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட வேண்டும்.
 விடைத்தாள் கட்டுக் காப்பு மையங்கள் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். எந்தவித புகார்களும் இல்லாமல் பொதுத்தேர்வை நடத்துவது அவசியம்'.
 ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பட்டியல் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT