சாரண இயக்க முப்பெரும் விழா: மாணவர்களுக்கு விருது

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சாரண, சாரணியர் இயக்கத்தின் நிறுவனர் சர் லார்டு பேடன் பவல் மற்றும் அவரது துணைவி லேடி பேடன் பவல் ஆகியோரது பிறந்தநாள் ஆண்டுதோறும் உலக சிந்தனை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 
சென்னை, கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.22) நடைபெற்ற  சிந்தனை விழா,  குருளையர் மற்றும் நீலப்பறவையர் விருது வழங்கும் விழா,  தகுதித் திறன் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்து, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்துக்கான புதிய இணைய தளத்தை (ஜ்ஜ்ஜ்.க்ஷள்ஞ்ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.ர்ழ்ஞ்) பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.    இதையடுத்து, தலைமையகத்தில் உள்ள வென்லாக் பூங்கா வளாகத்தில் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான போட்டிகள்  நடைபெற்றன. 
இதில், மாநில சாரண இயக்க ஆணையர் ஹரீஷ் எல்.மேத்தா,  சாரணிய இயக்க ஆணையர் வசுந்தராதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com