சாலை விபத்துகள்: சென்னையில்  கடந்தாண்டு 1297 பேர் சாவு;  6243 பேர் காயம்

சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1297 பேர் இறந்தனர், 6234 பேர் காயமடைந்தனர்.
சாலை விபத்துகள்: சென்னையில்  கடந்தாண்டு 1297 பேர் சாவு;  6243 பேர் காயம்

சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1297 பேர் இறந்தனர், 6234 பேர் காயமடைந்தனர்.
நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெருநகரங்களில், சென்னை முதல் இரண்டு இடங்களுக்குள்ளே இருந்து வருகிறது. சென்னையில் அதிகரித்த சாலை விபத்துகளால், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சவாலான காரியமாக இருந்தது.
சென்னையில் கடந்த 2016-இல் 7466 விபத்துகளில், 1306 பேர் இறந்தனர், 5828 பேர் காயமடைந்தனர். 2017-இல் 7516 விபத்துகளில் 1312 பேர் இறந்தனர்,  5870 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2018-இல் 7794 சாலை விபத்துகளில் 1297 பேர் இறந்துள்ளனர், 6243 பேர் காயமடைந்துள்ளனர். இதில் கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டு 15 இறப்புகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் 79 சதவீதமும்,  வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதினால் 47.9 சதவீதமும், அலட்சியம், முந்திச் செல்லுதல் போன்றவற்றால் 41 சதவீதமும், மது போதையின் காரணமாக 2.6 சதவீதமும் சாலை விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை தலைக்கவசம் அணியாததாலும், இத்தகைய விபத்துகளில் 20 வயதில் இருந்து 30 வயது வரையுள்ள இளைஞர்களே 72 சதவீதம் இறப்பதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.
24 லட்சம் வழக்குகள்:   கடந்த இரு ஆண்டுகளாக சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விதிமுறைகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. 
சாலை விபத்துகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது,  தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, வாகனங்களில் அதிக சுமை ஏற்றுவது,  சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, கார்களை சீட்பெல்ட் அணியாமல் ஓட்டுவது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன.
இதன் விளைவாக இந்த 8 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அதிக கவனம் செலுத்தி,  வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மட்டும் தினமும் சுமார் 5 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதன் விளைவாக கடந்தாண்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீஸார் சுமார் 24.47 லட்சம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  
மாணவர்களிடம் விழிப்புணர்வுப் பிரசாரம்:  சென்னையில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக போக்குவரத்துப் பிரிவு, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் பள்ளி - கல்லூரி மாணவர்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்கின்றனர்.
அதோடு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக குறும்படங்கள், விழிப்புணர்வுப் படங்கள் ஆகியவற்றை போக்குவரத்துப் பிரிவு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதேபோல மக்கள் அதிகமாகக் கூடும் மார்க்கெட்டுகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களிலும் போலீஸார் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வுப் பிரசாரம் காரணமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையத் தொடங்கியிருப்பதாக சென்னை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரி தெரிவித்தார்.
போலீஸார் நம்பிக்கை: மேலும், இந்தாண்டு முன்னை காட்டிலும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது அதிகளவில் வழக்குப் பதிய திட்டமிட்டுள்ளதாகவும், பொதுமக்களிடம் சாலை விபத்து குறித்து இன்னும் தீவிரமாக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் மேலும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும் என போலீஸார் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.


விபத்துகளும்... இறப்புகளும்...

ண்டு                              2017               2018
சாலை விபத்துகள்    7516    7794  
உயிரிழப்பு    1347    1297
பலத்த காயம்    1500    2984
லேசான காயம்    4370    3259
வாகனம் சேதம்    334    284

போக்குவரத்து விதிமுறை மீறல்களும்...வழக்குகளும்...

பாக்குவரத்து விதிமுறைகள்    2017     2018
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்    78132    54502
சிக்னலை மீறிச் செல்லுதல்     202010    387113 
செல்லிடப்பேசியில் பேசியப்படி
வாகனம் ஓட்டுதல்    18896    28665
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்    27330     41024
வாகனங்களில் அதிக சுமை ஏற்றுதல்    4683    5125    
சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல்    606    2078  
தலைக்கவசம் அணியாமல்
இரு சக்கர வாகனம் ஓட்டுதல்    341332     461585
சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல்     90834    116848
பிற போக்குவரத்து மீறல்கள்    1499870    1350389  
மொத்தம்    2263693    2447329

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com