வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆணையர் ஆய்வு

வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் சனிக்கிழமை ஆய்வைத் தொடங்கினார். வரும் திங்கள்கிழமை வரை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையிலான ரயில் பாதையை சனிக்கிழமை ஆய்வு செய்த மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன். உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளி
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையிலான ரயில் பாதையை சனிக்கிழமை ஆய்வு செய்த மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன். உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளி

வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் சனிக்கிழமை ஆய்வைத் தொடங்கினார். வரும் திங்கள்கிழமை வரை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. முதல்கட்டமாக , கோயம்பேடு -ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, சென்ட்ரல்-விமானநிலையம், பரங்கிமலை-விமானநிலையம், விமானநிலையம்-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
இதற்கிடையில், டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையருக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதன்பேரில், டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான சோதனை ஓட்டம் மற்றும் ஆய்வை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் சனிக்கிழமை தொடங்கினார். இந்த சோதனை ஓட்டம் மற்றும் ஆய்வு வரும் திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது. வண்ணாரப்பேட்டை-சென்ட்ரல் வரையிலான வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, சென்ட்ரல்-டி.எம்.எஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். மூன்றாம் நாளில், ஓட்டுமொத்தமாக ஆய்வு செய்கிறார். மேலும்,  80 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தவுள்ளார்.
இது குறித்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியது: வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் வழித்தடத்தில்  தண்டவாள பணிகள், ரயில் சிக்னல் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு வசதிகள், ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறோம். ரயிலை இயக்கிப் பார்த்து சோதனை நடத்த உள்ளோம்.  ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தெரிவிப்போம். அதன்பிறகு, ஒப்புதலை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும், அரசிடமும் கொடுக்கப்படும் என்றார் அவர்.
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது:     வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப் பணி 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்து, ரயில் சேவை தொடங்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன்   2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 5 ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், எங்கள் கணக்கெடுப்புபடி, இரண்டு ஆண்டுக்கு முன்னதாக இந்தப்பணிகளை முடிவடையும்
பெங்களூரில் முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதையும்,  இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதையும் இணைப்பதற்கு முன்னதாக 60 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். முதல், இரண்டாம் கட்ட மெட்ரோ  ரயில் திட்டப்பணி முடிந்து, பாதைகள்  இணைப்புக்கு பிறகு 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அதுபோல, சென்னை மெட்ரோ ரயில் பயணத்தில் முதல்கட்ட திட்டப்பணி, இரண்டாம்கட்ட திட்டப்பணி முடிந்து பாதை இணைப்புக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். 
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. மெட்ரோ ரயிலில்  தொழில்நுட்பம் உள்பட சில பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com