சென்னை

வித்தியாசம்!

DIN

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் பல வித்தியாசமான அரங்குகள் இடம் பெற்றிருக்கின்றன.  அவற்றில்  ஒன்று சாதாரண மனிதர்களுக்கும் பயன்படக் கூடிய சட்டங்களை விளக்கும் எளிய தமிழ்ப் புத்தகங்களை  விற்பனை செய்யும் அரங்கு. 
ராஜாத்தி பதிப்பகம் என்ற  அந்த அரங்கில் அன்றாடம் நமக்குத் தேவையான சட்ட அறிவுப் புத்தகங்கள் பல  உள்ளன.
பாகப் பிரிவினை செய்யும்போது பயன்படும் சட்ட விவரங்களைச் சொல்லும் புத்தகங்கள் உள்ளன.
நிலம் அ-ழ  என்ற  புத்தகத்தில் பட்டா, பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ், சிட்டா, அடங்கல், கிரையம், வரி, நில அளவை, நிலத்தின் மார்க்கெட் வேல்யூ, பட்டா எண், பவர் ஆஃப் அட்டர்னி, பவர் ஏஜெண்ட், போலி பத்திரத்தை அடையாளம் காண்பது எப்படி?  ஒரு வீட்டுமனை அரசு அங்கீகார வீட்டுமனைதானா? தாய்ப்பத்திரத்தில் என்ன அடங்கியிருக்கும்?  நிலத்தைக் குத்தகைக்கு விடும்போது  என்ன செய்ய வேண்டும்? என்று நிலம் தொடர்பான சாதாரண மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளன.     
இதே போன்று பட்டா குறித்து ஒரு நூலே இருக்கிறது. தனிப் பட்டா, கூட்டுப் பட்டா உள்பட பலவிவரங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளன.
எது அங்கீகாரமற்ற வீட்டுமனை என்பதை விளக்கும் ஒரு புத்தகம், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் விவரங்களை எடுத்துச் சொல்கிறது.
வீடு, நிலம் போன்ற சொத்து தொடர்பான சட்டங்களைப் பற்றி மட்டுமல்ல, பெற்றோர், மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம் குறித்தும் கூட புத்தகங்கள் உள்ளன.  பெற்றோர்களைச் சரிவர கவனிக்காத பிள்ளைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அவை விளக்குகின்றன. 
அன்றாட வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  பல சட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில்  இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT