வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ வழித்தடத்தில் அதிகாரி ஆய்வு

வண்ணாரப்பேட்டை டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன்  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வை மேற்கொண்டார்.

வண்ணாரப்பேட்டை டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன்  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வை மேற்கொண்டார்.
டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் சமீபத்தில் முடிந்தன. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையருக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதன்பேரில், டி.எம்.எஸ். வண்ணாரப்பேட்டை இடையேயான சோதனை ஓட்டம் மற்றும் ஆய்வை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் சனிக்கிழமை தொடங்கினார். முதல்நாள் ஆய்வு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு  10 மணிவரை நடைபெற்றது. அப்போது, வண்ணாரப்பேட்டை முதல் சென்ட்ரல் வரை அவர் ஆய்வு செய்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணியை கடந்து ஆய்வு நீடித்தது. சென்ட்ரல்-டி.எம்.எஸ் இடையே  ஆய்வு மேற்கொண்டார். சுரங்கப்பாதையில்  முழுமையாக ஆய்வு  செய்தார். குறிப்பாக அரசினர் தோட்டம், எல்.ஐ.சி,ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். சிக்னல்கள் சரியாக இயங்குகிறதா?பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com