மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற மதிமுக பாடுபடும். திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக வந்துள்ளது என்றார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், நாமக்கல் தொகுதி வேட்பாளர் சின்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோரும் ஸ்டாலினை அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
மு.க.ஸ்டாலின் புதன்கிழமையிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். இதற்காகவும் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்துக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com