சென்னையில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.


சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டையில்  உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு அடையாறில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கு பெரம்பூர் சர்மா நகரில் உள்ள சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திலும்  காலை 10 மணி முதல் மாலை 3 வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒருவர் பேர் வேட்பு மனு: தென்சென்னை மக்களவைத் தேர்தலில் போட்டியிட  சுயேச்சை வேட்பாளர் ஜே. ஜான்சி ராணி என்பவர் மட்டுமே புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com