சென்னை

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் சென்னைத் துறைமுகம் சாதனை

DIN


சரக்கு பெட்டகங்களைக் கையாளுவதில் சென்னை துறைமுகம் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
இது குறித்து துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:           சென்னைத் துறைமுகம் சரக்குகளைக் கையாளுவதில் இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. இந்தியாவில் பழமையான துறைமுகங்களில் ஒன்றான இங்கு 2 தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இரண்டிலும், நடப்பு நிதியாண்டில் வியாழக்கிழமை வரை 15, 65, 346 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளைவிட அதிகம். இச்சாதனைக்கு காரணமாக இருந்த துறைமுக அதிகாரிகள், சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள் உள்ளிட்டோரை துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் பாராட்டியதாகவும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT