அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளில் போட் டியிடும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தங்களது


வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளில் போட் டியிடும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதன் விவரம்:
தென் சென்னை-அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன்:
தொழில்: மருத்துவர்.
கையிருப்பு: ஜெ.ஜெயவர்தனிடம் ரூ. 25,000, மனைவி ஆர்.சொர்ணலட்சுமியிடம் ரூ. 2,50,000.
வங்கி இருப்பு: ஜெ.ஜெயவர்தனின் வங்கிக்கணக்குகளில் ரூ. 46,41,988, அவரது மனைவி ஆர்.சொர்ணலட்சுமி பெயரில் ரூ.31,889.
மொத்த சொத்து மதிப்பு: ரூ.2.90 கோடி.
அசையும் சொத்து: ஜெ.ஜெயவர்தன் பெயரில் ரூ. 49 லட்சத்து 66,988, மனைவி ஆர்.சொர்ணலட்சுமி பெயரில் ரூ. 38 லட்சத்து 67,889.
அசையா சொத்து: ஜெ.ஜெயவர்தன் பெயரில் ரூ. 2.40 கோடி,   மனைவி ஆர்.சொர்ணலட்சுமி  பெயரில் அசையா சொத்து இல்லை.
கடன்: ஜெ.ஜெயவர்தனுக்கு ரூ. 96,21,000, மனைவி ஆர்.சொர்ணலட்சுமிக்கு கடன் இல்லை.


வடசென்னை- தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்:
தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்.
கையிருப்பு: ஆர்.மோகன்ராஜிடம் ரூ. 8 லட்சம், மனைவி உண்ணாமலையிடம் ரூ. 3.50 லட்சம்.
வங்கி இருப்பு: மோகன்ராஜ் வங்கிக்கணக்குகளில் ரூ. 12,171, மனைவி உண்ணாமலை பெயரில் ரூ.19,867.
மொத்த சொத்து மதிப்பு: ரூ.1.57 கோடி
அசையும் சொத்து: மோகன்ராஜ் பெயரில் ரூ. 1.40 கோடி, மனைவி உண்ணாமலை பெயரில் ரூ. 35 லட்சத்து 21,667.
அசையா சொத்து: மோகன்ராஜ் பெயரில் ரூ. 16 லட்சத்து 92,000,  மனைவி உண்ணாமலை பெயரில் ரூ. 1.77 கோடி.
கடன்: மோகன்ராஜுக்கு ரூ. 28 லட்சத்து 31,960,  மனைவி உண்ணாமலைக்கு கடன் இல்லை.


மத்திய சென்னை-பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பால்:
தொழில்: ஹோட்டல்,  சுயதொழில்.
கையிருப்பு: எஸ்.ஆர்.சாம்பாலிடம் ரூ. 25,317, மனைவி கார்டிலா பபிதா பாலிடம் ரூ.  18,189.
வங்கி இருப்பு: எஸ்.ஆர்.சாம்பாலின் வங்கிக்கணக்குகளில் ரூ. 7,24,327,  மனைவி  கார்டிலா பபிதா பால் பெயரில் ரூ. 5,62,983.
மொத்த சொத்து மதிப்பு: ரூ.29.70 கோடி.
அசையும் சொத்து: எஸ்.ஆர்.சாம்பாலுக்கு ரூ. 1.17 கோடி, மனைவி கார்டிலா பபிதா பாலுக்கு ரூ. 35  லட்சம்.
அசையா சொத்து: எஸ்.ஆர்.சாம்பாலுக்கு ரூ. 28.53 கோடி,  மனைவி கார்டிலா பபிதா பாலின் பெயரில் அசையா சொத்துகள் இல்லை.
கடன்: எஸ்.ஆர்.சாம்பாலுக்கு  ரூ. 25 கோடி,  மனைவி கார்டிலா பபிதா பாலுக்கு ரூ. 7,32 733.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com