"சத்யமேவ ஜெயதே' கோட்பாட்டிற்கிணங்க வாக்கு சேகரிப்பு

மகாத்மா காந்தியின் "சத்யமேவ ஜெயதே' எனும் கோட்பாட்டிற்கிணங்க வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வேண்டும் என காந்திய அறக்கட்டளைகள் வலியுறுத்தியுள்ளது. 

மகாத்மா காந்தியின் "சத்யமேவ ஜெயதே' எனும் கோட்பாட்டிற்கிணங்க வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வேண்டும் என காந்திய அறக்கட்டளைகள் வலியுறுத்தியுள்ளது. 
ஹரிஜன் சேவா சங்க அறிவுரைப்படி தயாரிக்கப்பட்ட காந்திய தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு, வேட்பாளர்கள், மக்கள் என அனைவருக்குமான வாக்குறுதிகள் இடம்பெற்ற இந்த அறிக்கையினை தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது, பொது வாழ்வில் ஈடுபடும் தலைவர்களின் சொந்த வாழ்க்கையை முன்வைத்து விமர்சனம் செய்வது,  மத, இனவாத முறையில் வாக்குச் சேகரிப்பது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, போலி வாக்குறுதிகளை வழங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றியும், "சத்யமேவ ஜெயதே' என்னும் காந்தியடிகளின் கூற்றுக்கிணங்கவும் வாக்குச் சேகரிக்க வேண்டும். 
இதேபோல் அரசும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, அரசு சாரா அமைப்புகள், காந்திய அறக்கட்டளைகள் போன்ற சேவை வழங்கும் அமைப்புகளுக்கு குடிநீர், சொத்து வரி, வருமான வரி, கட்டடத்திற்கு அனுமதி ஆகியவற்றுக்கு  விலக்களிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். 
பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது பாகுபாடின்றி, பணத்தை எதிர்பாராமல், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 
நிகழ்ச்சியில் வருமான வரித் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ஹரிஜன் சேவா சங்க மாநிலத் தலைவர் மாருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com