சென்னை

சமூக ஊடகங்களில் முழு விவரங்களைக் கொடுக்க வேண்டாம்

DIN

சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கொடுப்பதை பெண்கள் தவிர்க்க வேண்டும். இதன் மூலமாக பிரச்னையில் இருந்து காத்துகொள்ள முடியும் என்று சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது.  குறிப்பாக, சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கமாக மாறியுள்ளது. இதில்,  முகநூல், இன்ஸ்டாகிராம், சுட்டுரை,  மின்னஞ்சல் ஆகியவை முக்கியமாக இருக்கின்றன.
2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சமூக ஊடகங்களை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும்,  ஒரு  நிமிஷத்துக்கு 11 புதிய நபர்கள் சமூக ஊடகங்களில் இணைவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதிலும் முகநூல், இணையம், கட்செவி (வாட்ஸ்அப்) ஆகியவற்றை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில்  தங்களுக்கு தேவையான பல்வேறு தகவல்களைப் பெற்று வருகின்றனர்.  மற்றொருபுறம் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் அண்மையில் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுபோல, பெண்களுக்கு எதிராக பல்வேறு மோசமான  நிகழ்வுகள் முகநூல் மூலமாகவும், செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் கட்செவி மூலமாகவும் அரங்கேறி வருகிறது.
பெண்களுக்கு எதிரான 4 முக்கிய குற்றங்கள்: பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து சைபர் பாதுகாப்பு  ஆலோசகர் எஸ்.நாகராஜன் சுப்பு கூறியது: 2017-ஆம் ஆண்டில் சைபர் குற்றப்பிரிவில் 53 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் பெண்களுக்கு எதிராக குற்றங்களும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. சைபர் பிரிவில், பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. அதில்,  இணையதளத்தில் கொடுமைப்படுத்தல் (ஸ்ரீஹ்க்ஷங்ழ் க்ஷன்ப்ப்ஹ்ண்ய்ஞ்), 
இணையத்தின் மூலமாக பாராட்டு (ஸ்ரீஹ்க்ஷங்ழ் ஞ்ழ்ர்ர்ம்ண்ய்ஞ்), இணையத்தில் பின்தொடர்தல் (ஸ்ரீஹ்க்ஷங்ழ் ள்ற்ஹப்ந்ண்ய்ஞ்), உருவத்தை மாற்றி குற்றம் செய்தல் ஆகிய 4 வகையான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் நடைபெறுகின்றன. 
இணையத்தில்  கொடுமைப்படுத்தல் என்பது நம்மை மிரட்டல், திட்டுதல், அவமானப்படுத்தல், அசிங்கமாக பேசுவது ஆகியவை ஆகும். இதில், தெரியாதவர்களிடம் இருந்து குறுந்தகவல்  வரும். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசமாட்டோம். ஆனால், முகநூல், மின்னஞ்சல், கட்செவி, இன்ஸ்டாகிராமில் தெரியாத நபர்களுடன்அறிமுகப்படுத்திக் கொள்வோம். 
ஒருவர் உங்களை திட்டினால் அவர்தான் எதிரி. ஆனால், உங்களை ஒருவர் பாராட்டினால், நீங்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். இது தான் "சைபர் க்ருமிக்'. இதை உளவியல் ரீதியாக பெண்களை மயக்கி தங்கள் வலைக்குள் சிக்க வைக்க  பயன்படுத்துகின்றனர். 
முகநூல், கட்செவி, இன்ஸ்டாகிராம், சுட்டுரை ஆகியவற்றில் இல்லை என்றால் சமுதாயத்தில் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கணக்கு தொடங்குகிறார்கள். இதில்,இணைவது தவறில்லை. ஆனால், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நவீன செல்லிடப்பேசி நம்மிடம் இருக்கிறது. அதில், மின்னஞ்சல் கணக்கு வைத்தவர்கள் எல்லாரும் கண்காணிக்கப்படுவார்கள். ஏனெனில் கூகுள் கணக்கு இருக்கிறது. எனவே, செல்லிடப்பேசி மூலமாக அடையாளம் கண்டு விடுவார்கள். 
சமூக ஊடகங்களில் எதை தெரிவிக்கலாம், எதையெல்லாம் தெரிவிக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் நீங்கள் கணக்கு தொடங்கினால், உங்கள் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், புகைப்படம் ஆகிய விவரத்தை கொடுக்க வேண்டாம். உங்கள் புகைப்படத்தை  மார்பிங் தொழில்நுட்பத்தில் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
சமூக ஊடகங்களில் மின்னஞ்சல்,  முகநூல், கட்செவி ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முகநூலில் 8 வகையான பாதுகாப்பு விஷயங்கள் இருக்கின்றன.  அதை அறிந்து, பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இந்திய சைபர் சமூக தலைவர் பாலு சுவாமிநாதன் கூறியது:  டிஜிட்டல் வந்தபிறகு, குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தவறு செய்தவர்களை பற்றி புகார் கொடுக்க பெண்கள்  தயங்கக் கூடாது. எப்போது, சைபர் குற்றம் வந்துவிட்டதோ அப்போது நமது மனநிலை மாற வேண்டும் என்று பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார் அவர்.
சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சமூக ஊடகங்களில் உள்ள பாதுகாப்பு விஷயங்களை முழுமையாக தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT