சென்னை

வாகனச் சோதனை: ரூ.53 லட்சம் பறிமுதல்

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னையில் கடந்த இரு தினங்களில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், வண்டலூர் வெளிப்புறச் சாலையில் குன்றத்தூர் போலீஸார் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் பாதுகாப்புப் பணி நிறுவனத்துக்குச் சொந்தமான காரை வழிமறித்து சோதனையிட்டனர். இச் சோதனையில் அந்த காரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.48.10 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்தப் பணம், குன்றத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வசூல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு போதிய ஆவணம் இல்லாததால், அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தாங்காடு: மணலி எம்.எப்.எல். சந்திப்பில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் மு.சந்திரசேகர ரெட்டி, ஆவணமின்றி ரூ.5 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT