குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு

குண்டர் சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 காஞ்சிபுரத்தை அடுத்த மானாம்பதியைச் சேர்ந்தவர் திவாகர் (23). இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி
 முசரவாக்கத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தாபா உணவகத்துக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றார். இதனை உணவக உரிமையாளர் கேட்டதற்கு தகாத வார்த்தைகளில் பேசியதோடு, கத்தியைக் காட்டி, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.2,700 ரொக்கத்கதை மிரட்டிப் பறித்துள்ளார். மேலும், உணவகத்தில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்பிலான பொருள்களை உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பாக உணவக உரிமையாளர், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பிரபாகர், குற்றம்சாட்டப்பட்ட திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதனிடையே, திவாகரை கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 திவாகர் மீது ஏற்கெனவே, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, அடிதடி, ரவுடித்தனம் செய்தது உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திவாகரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் ஆட்சியரின் ஆணையை வழங்கிய பாலுசெட்டிசத்திரம் போலீஸார், திவாகரை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com