காஞ்சிபுரம்

பாமக செயற்குழுக் கூட்டம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூரில் காஞ்சிபுரம் மேற்கு, தெற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பாமகவின் காஞ்சிபுரம் மேற்கு, தெற்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்ட மாவட்ட செயற்குழுக் கூட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. மாநில துணை அமைப்பு செயலர் ஈ.வரதராசன் தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்டச் செயலர் ப.சோ.கருணாகரன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள் ந.ஆறுமுகம், கு.கமால், தே.லோகநாதன், ஆர்.சண்முகம், வசந்தி கன்னையன், செ.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்தக் கூட்டத்தில் முன்னாள் ரயில்வே இணை அமைச்சரும், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, மாநில துணை பொதுச் செயலர் பொன்.கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லத்தூர் வடக்கு ஒன்றிய அமைப்புச் செயலர் பெ.சண்முகப்பிரியன் நன்றி கூறினார். இக்கூட்டம் நிறைவடைந்த பின், ஏ.கே.மூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியது:
 இங்கு காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அமைப்புச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் கட்சி நிர்வாகிகள் நேரடியாகச் சென்று, அப்பகுதியினரை கட்சி உறுப்பினராகச் சேர்க்க துண்டுப் பிரசுரங்களை வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதற்காக அனைத்து பொறுப்பாளர்களும் பாடுபட வேண்டும். கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணித் தலைவரும் தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைப்பர். நாம் பெரிய வெற்றியைப் பெறுவோம். யாருடன் மெகா கூட்டணி என்பதை மருத்துவர் ராமதாஸ்தான் அறிவிப்பார்.
 பாலாற்றில் இதுவரை தடுப்பணை கட்டாமல் தமிழக அரசு இருந்து வருகிறது. தடுப்பணை கட்ட வேண்டியதன் அவசியம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் முதல் வள்ளிபுரம் வரையிலான பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்டார். தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட முயற்சிக்க வேண்டும் என்றார் ஏ.கே.மூர்த்தி.
 முன்னதாக, மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் மீ.க.செல்வகுமார், மாநில துணை அமைப்பு தலைவர் நீ.கருணாகரன், மாவட்டச் செயலர்கள் ஆ.வா.கோபாலகண்ணன் (தெற்கு), வ.உமாபதி (மேற்கு), மாவட்டத் தலைவர்கள் சி.ராமானுஜ ரெட்டியார் (தெற்கு), இரா.தனசேகரன் (மேற்கு), மாநில உழவர் பேரவை துணைத் தலைவர் தே.சாந்தமூர்த்தி, தெற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கி.கணபதி, கட்சி நிர்வாகிகள் சு.ரவிச்சந்திரன், தி.கற்பகவள்ளி, ச.சரவணன், ஒன்றியச் செயலர்கள் பெ.சண்முகபிரியன் (லத்தூர் வடக்கு), ஜெ.ரவி (லத்தூர் தெற்கு), லோ.ராம்குமார் (லத்தூர் கிழக்கு), பொ.பரசுராமன் (லத்தூர் மேற்கு), க.ஜெய்சங்கர் (மதுராந்தகம் கிழக்கு ஒன்றியம்), ஜெ.ஏழுமலை (அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றியம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT