காஞ்சிபுரம்

சீனிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN


மதுராந்தகத்தை அடுத்த ராமானுஜ யோகம் எனும் அம்ருதபுரி பீடத்தில் உள்ள ஸ்ரீமதுரவல்லி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
படாளம்-வேடந்தாங்கல் நெடுஞ்சாலையையொட்டி உள்ள இக்கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சந்நிதிகளைப் புதுப்பித்து, திருப்பணிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை திருவாராதணம், புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், அஷ்ட பந்தனம் சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை கோ பூஜை, புண்யாஹவாசனம், மகா பூர்ணாஹுதி, கும்ப சமோராபணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க, யாக சாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் புனித கலசங்களை ஏந்தி, கோயிலை வலம் வந்தனர். பின்னர், கோயில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சென்னை சீனிவாச நிகேதன பீடாதிபதிகள் சீத்தாராம சுவாமி, தாரா மாதாஜி ஆகியோர் தலைமை வகித்து, கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர். பின்னர் சீனிவாச பெருமாள் சந்நிதியில் சிறப்பு திருமஞ்சனம், திருப்பாவாடை, யாகம், சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், அலங்காநல்லூர் ராஜலிங்கேஸ்வர கோயில் சித்தர், மதுராந்தகம் குமாரனந்தா சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் படாளம், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT