காஞ்சிபுரம்

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு

DIN


உத்தரமேரூரில் தேசிய குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பேருந்து நிலைய வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கலைக் குழுவினர் திரளானோர் கலந்துகொண்டு, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையில் ஈடுபடுத்துவது, சட்டப்படி குற்றச்செயல். அவ்வாறு வேலையில் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை, தண்டனை விவரங்கள், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் முடிப்பது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் செயல் விளக்கத்துடன், ஆடல்-பாடல், மேளதாளங்களுடன் சிறப்பாக அரங்கேற்றம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT