சித்த மருத்துவம் இணைந்தால்தான் ஆயுஷ் திட்டம் வெற்றி பெறும்

ஆயுஷ் திட்டத்தில் சித்த மருத்துவமும் இணைந்தால்தான் அத்திட்டம் வெற்றி பெறும் என பிரபல டாக்டர் செரியன் தெரிவித்தார். 
சித்த மருத்துவம் இணைந்தால்தான் ஆயுஷ் திட்டம் வெற்றி பெறும்


ஆயுஷ் திட்டத்தில் சித்த மருத்துவமும் இணைந்தால்தான் அத்திட்டம் வெற்றி பெறும் என பிரபல டாக்டர் செரியன் தெரிவித்தார். 
சென்னை மீனாட்சி உயர்கல்வி அகாதெமி, ஆராய்ச்சி நிலையத்தின் 12ஆவது பட்டமளிப்பு விழா காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மீனாட்சி அகாதெமி உயர்கல்வி நிறுவன வேந்தர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
துணைவேந்தர் ஆர்.எஸ்.நீலகண்டன் வரவேற்புரையாற்றினார். 
பதிவாளர் ஏ.என்.சந்தானம் முன்னிலை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், எம்.டி, எம்.எஸ், பல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், செவிலியர், ஆராய்ச்சித் துறை, கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளில் பயின்ற 1,370 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதோடு, 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும், பிரபல இருதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியது:
தமிழகத்தில் ஸ்டெம் செல் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இருப்பினும், ஸ்டெம் செல் வங்கி தொடர்பான ஆவணங்களையும், சான்றுகளையும் பெறுவது கடினமாக உள்ளது. இதனை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தில், தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும். அப்போதுதான் ஆயுஷ் திட்டம் முழுமையான வெற்றி பெறும் என்றார் அவர். 
டீன் எஸ்.கோபிநாதன் நன்றி கூறினார். இவ்விழாவில் திரளான பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com