குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

படப்பை அரசுப் பெண்கள் பள்ளியில் குழந்தைத் திருமணங்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பட்டிமன்றம்


படப்பை அரசுப் பெண்கள் பள்ளியில் குழந்தைத் திருமணங்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் படப்பை, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலத்துறை சார்பில், குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்துக்கு பள்ளி மாணவி பரமேஸ்வரி நடுவராக இருந்தார்.
குழந்தைத் திருமணத்திற்கு காரணம் பெற்றோர்களா?, குழந்தைகளா? என்ற தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. பெற்றோர்களே என்ற தலைப்பில் மாணவியர் பிரியதர்ஷினி, நந்தினி, லாவண்யா, டசின், கோபிகா ஆகியோரும், குழந்தைகளே என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வி, சரிகா, யோகலட்சுமி, ரூபஸ்ரீ, ஜெயஸ்ரீ, ஸ்ரீஹரிணி ஆகியோர் பேசினர். இதையடுத்து, குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்; விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. 
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான வழிமுறைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக புகார் தெரிவிப்பது, சைல்டு லைன் திட்டம் ஆகியவை குறித்து மாணவியருக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைல்டுலைன் இயக்குநர் தேவன்பு மற்றும் உறுப்பினர் ஆனிஸ் அற்புதம், டிரீம்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குநர் டேவிட் பால் உள்பட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com