செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN | Published: 12th September 2018 04:23 AM


வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மதுராந்தகம் அருகில் உள்ள இக்கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் எஸ்.டி.மனோகர்குமார் தலைமை வகித்தார். கல்லூரி டீன் பத்ரி வரவேற்றார். கல்லூரி செயலர் பவன்குமார், முதல்வர் சுஜாதா ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சென்னை மகரிஷி வித்யா மந்திர் முதல்வர் எஸ்.நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை ஆகிய பாடப் பிரிவுகளில் 120 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபம் கல்விக் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.


 

More from the section

குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
பாமக செயற்குழுக் கூட்டம்
டெங்கு கள ஆய்வு: அரிசி ஆலைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஜனநாயக வாலிபர் சங்க ஆர்ப்பாட்டம்